செய்திகள்

அம்பத்தூரில் ரூ.2½ கோடி நில மோசடி - கணவன்-மனைவி கைது

Published On 2019-01-08 14:47 IST   |   Update On 2019-01-08 14:47:00 IST
அம்பத்தூரில் ரூ.2½ கோடி நில மோசடி செய்த கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

முகப்பேரை சேர்ந்தவர் குணசுந்தரி. இவருக்கு சொந்தமாக அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் ரூ.2½ கோடி மதிப்பிலான நிலம் உள்ளது.

இந்த நிலத்தை விற்று கொடுப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவருக்கு குணசுந்தரி பவர் கொடுத்துள்ளார். ஆனால் அந்த இடத்தை அவர் விற்று கொடுக்காததால் அதற்கான அதிகார பத்திரத்தை திரும்ப பெற்றுக்கொள்வதாக குணசுந்தரி கூறி உள்ளார்.

ஆனால் அதற்கு ஒத்துக் கொள்ளாமல் குமார் தனது மனைவி கோமதியின் பெயருக்கு மோசடியாக இடத்தை விற்பனை செய்து உள்ளார்.

இதுபற்றி குணசுந்தரி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து கணவன்- மனைவியான குமார், கோமதி ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News