செய்திகள்

பெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசிய விவகாரம்- எஸ்வி சேகர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

Published On 2019-01-05 06:32 GMT   |   Update On 2019-01-05 06:32 GMT
பெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசியது தொடர்பாக எஸ்.வி.சேகர் மீதான வழக்கை வருகிற 23-ந்தேதிக்கு ஒத்திவைத்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SVeShekher
கரூர்:

பா.ஜ.க.பிரமுகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நடிகர் எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர் குறித்து விமர்சனம் செய்து கருத்து பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக தலித் விடுதலை இயக்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் தலித்பாண்டியன், கரூர் குற்றவியல் கோர்ட்டு எண்-2ல் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜராக வேண்டுமென எஸ்.வி.சேகருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அவர் பலமுறை ஆஜராகாமல் இருந்து வந்தார். மேலும் வழக்கு விசாரணையில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்ததையடுத்து, அவருக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா கிறிஸ்டி, வருகிற 23-ந்தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்தநிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் மீதான வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 2018, ஜூலை 19-ந்தேதி முதல் 6 வாரங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடை உத்தரவை நீக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தலித் பாண்டியன் தொடர்ந்த வழக்கு விசாரணை வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News