செய்திகள்

முக ஸ்டாலின் நாளை ஈரோடு வருகை

Published On 2018-12-26 16:08 IST   |   Update On 2018-12-26 16:08:00 IST
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை 5 மணி அளவில் ஈரோடு வருகிறார். அங்கு அவர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவிக்கிறார். #DMK #MKStalin
ஈரோடு:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணி அளவில் ஈரோடு வருகிறார்.

அன்று ஈரோடு பெருந்துறை ரோடு ஆலயமணி மகாலில் ஈரோடு தெற்கு மாவட்டம் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி தி.மு.க.வில் இணைகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அவரது முன்னிலையில் 2 ஆயிரம் பேர் தி.மு.க.வில் சேர்கிறார்கள்.

முன்னதாக மு.க.ஸ்டாலின் ஈரோடு மூலக்கரை பிரிவில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்கு செல்கிறார்.

அங்கு அவர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவிக்கிறார். சிறிது நேரம் போராட்டத்தில் அவரும் பங்கேற்று பேசுகிறார்.

மேலும் ஈரோடு முனிசிபல் காலனியில் மறைந்த தி.மு.க.முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதனையும் மு.க.ஸ்டாலின் பார்வையிட உள்ளார்.

ஈரோடு வரும் மு.க.ஸ்டாலினை வரவேற்கவும், நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் மாநில, மாவட்ட பகுதி ஒன்றிய பேரூர், ஊராட்சி, கழக நிர்வாகிகள், துணை அமைப்புகளின் பிரதிநிதிகள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும் என முன்னாள்அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான முத்துசாமி கூறி உள்ளார். #DMK #MKStalin
Tags:    

Similar News