செய்திகள்

26-ந்தேதி நாடு தழுவிய போராட்டம்: புதுவை அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் எச்சரிக்கை

Published On 2018-11-24 06:54 GMT   |   Update On 2018-11-24 06:54 GMT
புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ள போராட்டத்தில் புதுவை அரசு ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது என்று தலைமை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #PondicherryGovtEmployees
புதுச்சேரி:

புதிய பென்‌ஷன் திட்டத்தை எதிர்த்து நாளை மறுநாள் (திங்கள்கிழமை) நாடு தழுவிய போராட்டத்தை நடத்த அரசு ஊழியர் சங்கங்கள் திட்டமிட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக அரசு ஊழியர்கள் விடுமுறை எடுத்து அரசு ஊழியர் சங்கங்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.

இதில் மாநில கோரிக்கையை முன்வைத்து கூட்டுறவு சங்கங்களும் போராட்டம் நடத்த தயாராகி வருகிறது. இதனால் அரசு பணிகள் முழுமையாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே அனைத்து அரசு துறைகளுக்கும் தலைமை செயலாளர் அஸ்வினி குமார் உத்தரவின்பேரில் நிர்வாக சீர்திருத்தத்துறை அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

வருகிற 26-ந்தேதி அரசு ஊழியர்கள் நாடு தழுவிய போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக அறிகிறோம். இதை சட்டப்படி ஏற்க முடியாது.

எனவே அன்றைய தினம் அவசர காலமின்றி யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது. அன்றைய தினம் மதியம் 12 மணிக்குள் எத்தனை ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளனர்? எத்தனை பேர் பணிக்கு வரவில்லை என்ற விபரத்தையும் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #PondicherryGovtEmployees
Tags:    

Similar News