செய்திகள்

வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

Published On 2018-11-13 06:41 GMT   |   Update On 2018-11-13 06:41 GMT
வடசென்னை அனல்மின் நிலையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #ThermalPowerStation

பொன்னேரி:

மீஞ்சூர் அருகே உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் சுமார் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

அவர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு, அடையாள அட்டை, போனசை வாரியமே நேரடியாக வழங்க வேண்டும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் இன்று காலை அனல்மின் நிலைய 1-வது நிலை வாயில் அருகே நூதனமாக அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கோரிக்கைகள் அடங்கிய பதாகைககளை கைகளில் ஏந்தியபடி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதில் சி.ஐ.டி.யூ. செயலாளர் சுந்தரம், மாவட்ட தலைவர் விநாயகமூர்த்தி உள்படஏராளமான ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வடசென்னை அனல் மின் நிலைய தலைவர் வெங்கட்டையன் கூறும் போது, “ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து வருகிற 16-ந்தேதி குறளகத்தில் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடக்கிறது. இதில் உடன்பாடு ஏற்பட வில்லை எனில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளோம்” என்றார். #ThermalPowerStation

Tags:    

Similar News