செய்திகள்
விடுதலையான கைதிகள்.

எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா - மதுரை மத்திய சிறையில் இருந்து 18 கைதிகள் விடுதலை

Published On 2018-11-03 10:19 IST   |   Update On 2018-11-03 10:19:00 IST
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை மத்திய சிறையில் இருந்து 18 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். #MGRCenturyCeremony #PrisonersReleased
மதுரை:

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள ஆயுள்தண்டனை கைதிகளை நன்னடத்தை விதிகளின் கீழ் விடுதலை செய்ய அரசு முடிவெடுத்தது.

இதன்படி தமிழகம் முழுவதும் சிறைகளில் இருந்து கைதிகள் பல்வேறு கட்டங்களாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். மதுரை மத்திய சிறையில் இருந்து 12 கட்டங்களாக 221 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் ராஜலிங்கம், அப்பாஸ் என்கிற சையது அப்பாஸ், ஜோதி, பாண்டியன், ராஜரத்தினம், சாமிக்கண்ணு, பாக்கியம், சந்திரன், முகமது என்கிற அசோக், ஆறுமுகம், அந்தோணி, நாகராஜ், ஜேசுராஜா, வேலுசாமி, முத்து என்கிற நாச்சிமுத்து, ஆரோக்கியசாமி, சேகர்ராஜ், சுப்பையா ஆகிய 18 பேர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்று அழைத்து சென்றனர். மதுரை மத்திய சிறையில் இருந்து எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இதுவரை 239 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். #MGRCenturyCeremony  #PrisonersReleased



Tags:    

Similar News