செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள், எரிசாராய கேன்கள்,

கும்பகோணத்தில் பதுக்கி வைத்திருந்த 3888 மதுபாட்டில்கள் - 55 கேன் எரிசாராயம் பறிமுதல்

Published On 2018-10-17 05:15 GMT   |   Update On 2018-10-17 05:15 GMT
கும்பகோணத்தில் பதுக்கி வைத்திருந்த 3888 மதுபாட்டில்கள் மற்றும் 55 கேன்களில் இருந்த 1925 லிட்டர் எரிசாராயம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே மணஞ்சேரி பகுதியில் எரிசாராயம்- மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு ரகசியமாக விற்கப்படுவதாக கும்பகோணம் மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் மதுவிலக்கு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சரசுவதி, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் மணஞ்சேரி பகுதிக்கு சென்று கணகாணித்தனர்.

அப்போது பாதிகட்டப்பட்ட நிலையில் இருந்த ஒரு வீட்டில் சிலர் செல்வதும், வருவதுமாக இருந்தனர் இதனால் சந்தேகமடைந்த போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசார் வருவதை கண்ட ஒரு கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் போலீசார் அங்கிருந்த பொருட்களை சோதனை செய்தனர். இதில் அட்டை பெட்டிகளில் இருந்த 3888 மதுபாட்டில்கள், 55 கேன்களில் இருந்த 1925 லிட்டர் எரிசாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். மேலும் அருகே நிறுத்தியிருந்த ஒரு டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

 


இதுகுறித்து மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் இது தொடர்பாக அதேபகுதியை சேர்ந்த சாராய வியாபாரியான பெரியவன் என்கிற முருகன், அருண்பாண்டியன், ஆனந்த், மணிகண்டன், பாரதி, மற்றொரு முருகன் ஆகிய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News