செய்திகள்

ஆரணி கோவிலில் மீனாட்சியம்மன் கையில் அமர்ந்து அருள்பாலித்த கிளி- பக்தர்கள் பரவசம்

Published On 2018-10-15 12:27 GMT   |   Update On 2018-10-15 12:27 GMT
ஆரணி கோவில் உற்சவத்தில் மீனாட்சியம்மன் கையில் அமர்ந்து கிளி அருள்பாலித்த காட்சி பக்தர்களை பரவசமடைய செய்தது. #MeenakshiAmman

ஆரணி:

ஆரணியில் அரியாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நவராத்திரி விழா விமரிசையாக நடந்து வருகிறது. 5-ம் நாள் விழாவான நேற்று இரவு அரியாத்தம்மன் உற்சவர் சிலை மதுரை மீனாட்சியம்மனை போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அப்போது, அம்மனின் வலது கையில் உள்ள பழத்தின் மேல் உண்மையான பச்சைக்கிளி திடீரென வந்து உட்கார்ந்து அருள்பாலித்தது. கிளி பழத்தை கொத்தி கொத்தி கொத்தி சாப்பிட்டு சத்தமிட்டது.


பக்தர்கள் அம்மன் கையில் அமர்ந்த கிளியை பார்த்து பரவசமடைந்தனர். இதையடுத்து, மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பூஜையின்போது மீனாட்சியம்மன் முகத்தில் கிளி கொஞ்சி விளையாடியது. அருள்பாலித்த கிளியை ரசித்த பக்தர்கள் மெய் மறந்து மீனாட்சியம்மனை வழிபட்டனர். #MeenakshiAmman

Tags:    

Similar News