செய்திகள்
பெருமாள் முகத்தில் தண்ணீர் வடியும் காட்சி.

குடியாத்தம் கோவிலில் பெருமாள் சிலையில் தண்ணீர் வடிந்தது- பக்தர்கள் பரவசம்

Published On 2018-10-06 16:22 IST   |   Update On 2018-10-06 16:22:00 IST
குடியாத்தம் அடுத்த பிச்சானூரில் உள்ள வெங்கடேச பெருமாள் சிலையில் நீர் வடிந்ததால் பக்தர்கள் பரவசமடைந்து வழிபட்டனர்.
குடியாத்தம்:

குடியாத்தம் அடுத்த பிச்சானூர் அப்பு சுப்பையர் வீதியில் தென் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. புரட்டாசி 3-வது சனிக்கிழமையான இன்று காலை வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

அப்போது, வெங்கடேச பெருமாள் சிலையின் மூக்கு பகுதியில் இருந்து திடீரென தண்ணீர் வடிந்தது. அர்ச்சகர் துணியை வைத்து துடைத்தும் தண்ணீர் வருவது நிற்கவில்லை.

பக்தர்கள் சாமி சிலையில் வடிந்த தண்ணீரை ஆச்சரியத்துடன் பார்த்து வணங்கினர். இத்தகவல், பிச்சனூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் பரவியது.

ஏராளமான பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக கோவிலுக்கு வந்து வெங்கடேச பெருமாளை வணங்கி செல்கின்றனர்.
Tags:    

Similar News