செய்திகள்

ஆழ்வார்பேட்டையில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - 2 பேர் கைது

Published On 2018-10-02 07:10 GMT   |   Update On 2018-10-02 07:10 GMT
ஆழ்வார்பேட்டையில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest #ATMrobbery

சென்னை:

ஆழ்வார்பேட்டை டி.டி.கே. ரோட்டில் கனரா வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு காவலாளி இல்லை. நேற்று நள்ளிரவு மர்ம கும்பல் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து எந்திரத்தை உடைக்க முயன்றனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்தனர். உடனே கொள்ளை கும்பல் தப்பிச் செல்ல முயன்றது.

அவர்களில் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் அமைந்தகரையை சேர்ந்த நந்தகுமார், வேலூரை சேர்ந்த குமார் என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க பயன்படுத்திய இரும்பு கம்பிகள், ராடுகள் கைப்பற்றப்பட்டன.

சரியான நேரத்தில் போலீசார் வந்ததால் ஏ.டி.எம். கொள்ளை தடுக்கப்பட்டது. இதனால் அதிலிருந்த பல லட்சம் பணம் தப்பியது.

பிடிபட்ட 2 பேரும் வேறு எந்த கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சென்னை ராமாபுரத்தில் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதில் கொள்ளையர்கள் சிக்கவில்லை. இந்த கொள்ளை முயற்சியில் பிடிபட்ட 2 பேருக்கும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். #arrest #ATMrobbery

Tags:    

Similar News