செய்திகள்

தஞ்சை பெரிய கோவிலில் ஐஜி பொன் மாணிக்கவேல் குழு திடீர் ஆய்வு - பக்தர்கள் வெளியேற்றம்

Published On 2018-09-29 09:42 GMT   |   Update On 2018-09-29 09:59 GMT
தஞ்சை பெரிய கோவிலில் ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். #IdolWing #PonManickavel
தஞ்சை:

தமிழகம் முழுவதும் பழமையான கோவில்களில் இருந்த சாமி சிலைகள் கடத்தல் தொடர்பாக மூடி மறைக்கப்பட்ட பல்வேறு தகவல்கள், ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சர்வதேச கடத்தல் மன்னனான ஜெர்மனியைச் சேர்ந்த சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்டதில், இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஏராளமான சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சமீபத்தில் சென்னையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் 89 சிலைகள் மற்றும் தூண்கள் மீட்கப்பட்டன.

இதற்கிடையே 50 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவிலில் இருந்து திருடப்பட்ட ராஜராஜ சோழன் சிலை, அவரது பட்டத்து அரசியான உலகமாதேவி சிலை ஆகியவை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டது.



கோயில் வளாகத்தில் உள்ள சிலை பாதுகாப்பு மண்டபத்தில் நடத்தப்பட்ட தொடர் ஆய்வில் மேலும் சில சிலைகள் மாயமானது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தஞ்சை பெரிய கோவிலில் இன்று ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கோவிலுக்குள் இருந்த பக்தர்களை வெளியேற்றி கதவுகளை மூடிவிட்டு ஆய்வு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  #IdolWing #PonManickavel 
Tags:    

Similar News