செய்திகள்

ஊழல் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள் உடனே பதவி விலக வேண்டும்- பச்சமுத்து பேட்டி

Published On 2018-09-22 15:08 GMT   |   Update On 2018-09-22 15:08 GMT
தமிழக அரசில் ஊழல் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள் உடனே பதவி விலக வேண்டும் என ஐ.ஜே.கே. கட்சி தலைவர் பச்சமுத்து கூறியுள்ளார். #gutkha #ministervijayabaskar
பெரம்பலூர்:

இந்திய ஜனநாயக கட்சியின் திருச்சி மண்டல ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூரில் நடந்தது.
மாநில தலைவர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில இளைஞரணி செயலாளர் வரதராஜன், மாநில விளம்பர பிரிவு செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், மாநில விவசாய பிரிவு செயலாளர் ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட தலைவர் அன்பழகன் உட்பட பலர் பேசினர். கட்சி நிறுவனர் பச்சமுத்து சிறப்புரையாற்றினார்.

இதில் கட்சி செயல்பாடுகள், உறுப்பினர் சேர்க்கை, அரசியல் நிலைப்பாடு, வளர்ச்சி பணிகள் மேற் கொள்ளுதல், தேர்தல் கூட்டணி, நிர்வாகிகள் செயல்பாடு போன்றவை குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

பின்னர் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பச்சமுத்து நிருபர்களிடம் கூறுகையில், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குட்கா ஊழலில் ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டவுடன் அவர் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றாக கட்சியில் உயர் பதவி கொடுப்பது அங்கே குறைகள் அதிகமாக உள்ளது என அர்த்தம். அதை எங்கே வெளியே சொல்லி விடுவார் என பதவி கொடுத்து மறைக்கின்றனர்.

தமிழகத்தில் வழிப்பறி, கொள்ளை, கற்பழிப்பு சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. எனவே அரசு இதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க. ஊழலை கண்டித்து தி.மு.க. கண்டன போராட்டம் நடத்தியது. இதனால் மக்கள் அலை அவர்கள் பக்கம் திரும்பி விடுமோ என்ற பயத்தால் தற்போது ஈழத் தமிழர் பிரச்சினைக்காக தமிழக அரசு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக ஆட்சி நடத்துவதில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டும் என்றார்.  #gutkha #ministervijayabaskar
Tags:    

Similar News