செய்திகள்

மக்கள் பிரச்சினை என்பதால் முழு அடைப்பு போராட்டத்தை பா.ம.க. ஆதரிக்கிறது - ஜி.கே.மணி

Published On 2018-09-09 13:14 IST   |   Update On 2018-09-09 13:14:00 IST
மக்கள் பிரச்சினை என்பதால் முழு அடைப்பு போராடத்துக்கு பா.ம.க. ஆதரவு அளிக்கும் என்று ஜி.கே.மணி கூறியுள்ளார். #FuelPrice #BharatBandh #GKMani

சென்னை:

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை (10-ந்தேதி) பாரத் ‘பந்த்’க்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ‘பந்த்’க்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பா.ம.க. எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றி கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநிலத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் கட்சியின் நிலைப்பாடு பற்றி ஜி.கே.மணி கூறியதாவது:-

பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.


 

இது மக்களை வெகுவாக பாதிக்கும் பிரச்சினை. பொதுவாகவே மக்கள் பிரச்சினை என்றால் முன்னணியில் நின்று குரல் கொடுப்பது பா.ம.க.

எனவே மக்களுக்கான இந்த போராட்டத்தையும் ஆதரிக்க பா.ம.க. முடிவு செய்துள்ளது. நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தை வெளியில் இருந்து பா.ம.க. ஆதரிக்கிறது.

இவ்வாறு ஜி.கே.மணி கூறினார். #FuelPrice #BharatBandh #GKMani

Tags:    

Similar News