செய்திகள்

சோபியாவின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் - அர்ஜூன் சம்பத்

Published On 2018-09-05 08:00 GMT   |   Update On 2018-09-05 08:00 GMT
விமானத்தில் தமிழிசையுடன் பிரச்சினை செய்த சோபியாவின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார். #ArjunSampath #Sophia
கோவை:

வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள வ.உ.சி. நினைவு மண்டபத்தில் அவரது சிலை மற்றும் அவர் இழுத்த செக்குக்கு இந்து மக்கள் கட்சி (தமிழகம்) தலைவர் அர்ஜூன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வ.உ.சி.யின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் கோவை மாநகரில் வ.உ.சி.க்கு சிலை வைக்க வேண்டும். கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்த அறையை பராமரிப்பு செய்ய வேண்டும். அவினாசி சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.

தூத்துக்குடி சென்ற விமானத்தில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசையுடன் பிரச்சினையில் ஈடுபட்ட சோபியா என்ற பெண் தமிழிசையுடன் பயணம் செய்வதாக டுவீட் செய்துள்ளார். விமானத்துக்குள் கோ‌ஷம் எழுப்புவது தண்டனைக்குரிய குற்றம் என்பது கனடா சென்று பெண்ணுக்கு தெரியும். அந்த பெண் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார்.

எனவே தான் தமிழிசை முறையாக போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சோபியா மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இதுபோன்றவர்களுக்கு ஆதரவு தரக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார். #ArjunSampath #Sophia

Tags:    

Similar News