செய்திகள்

அமைதி பேரணியில் மக்களுக்கு இடையூறு கூடாது - தொண்டர்களுக்கு மு.க அழகிரி அறிவுறுத்தல்

Published On 2018-09-02 19:32 IST   |   Update On 2018-09-02 19:44:00 IST
செப்டம்பர் 5-ம் தேதி கருணாநிதி நினைவிடம் நோக்கி செல்லும் பேரணியில் மக்களுக்கு இடையூறு கூடாது என மு.க அழகிரி தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். #DMK #MKAzhagiri #Karunanidhi #MKStalin
மதுரை :

சென்னையில் வருகிற 5-ந் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் மதுரையில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், அமைதி பேரணியில் கலந்துகொள்ளும் தொண்டர்கள் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என மு.க. அழகிரி இன்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது :- 

வரும் 5-ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணாசிலை அருகில் பேரணி தொடங்கி கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படும்.

அமைதி பேரணியில் பங்கேற்கும் தொண்டர்கள் ஆரவாரம், ஆர்பாட்டத்திற்கு இடம் தராமல் நடந்து கொள்ள வேண்டும்.

மேலும், பேரணியின் போது தொண்டர்கள் அனைவரும் போலீசாருக்கும் மக்களுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமலும்  இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  #DMK #MKAzhagiri #Karunanidhi #MKStalin
Tags:    

Similar News