செய்திகள்
வேலூர் ஜெயிலில் இருந்து விடுதலையானவர்கள் வெளியே வந்த காட்சி.

5-வது கட்டமாக வேலூர் ஜெயில் கைதிகள் மேலும் 16 பேர் விடுதலை

Published On 2018-09-01 10:02 GMT   |   Update On 2018-09-01 10:02 GMT
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து 5-வது கட்டமாக இன்று காலை மேலும் 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர். #MGRCenturyCeremony
வேலூர்:

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் 187 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் விடுதலையாவதற்கு தகுதி பெற்றிருந்தனர். அவர்களின் விடுதலை பட்டியலும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

முதற்கட்டமாக கடந்த மாதம் 25-ந் தேதி வேலூர் ஜெயிலில் இருந்து 7 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 2-வது கட்டமாக இந்த மாதம் 4-ந் தேதி 24 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து, 3-வது கட்டமாக கடந்த 11-ந் தேதி ஒரே ஒரு கைதி மட்டும் விடுதலையானார். 25-ந் தேதி 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், 5-வது கட்டமாக இன்று காலை மேலும் 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இன்று காலை 7 மணி அளவில் விடுதலை செய்யப்பட்ட 16 கைதிகளுக்கும் உடமைகள், ஜெயிலில் வேலை பார்த்ததற்கான கூலி பணத்தை வழங்கி சிறைத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.  #MGRCenturyCeremony



Tags:    

Similar News