செய்திகள்

காணொலி காட்சி மூலம் மாணவர்களுக்கு நீட் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2018-08-31 10:04 IST   |   Update On 2018-08-31 10:04:00 IST
அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி தமிழகத்தில் 412 நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்றும், காணொலி காட்சி மூலம் நீட் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSenkottaiyan #NEETexam #NEETtraining
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் பின்புறம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ரூ.54.61 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் பூமி பூஜையும் இன்று காலை நடந்தது. விழாவில் தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது.-

அரசு நடுநிலைப் பள்ளிகளை சேர்ந்த 11 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களுக்கு இலவசமாக “டேப் மற்றும் டேட்டா” வழங்கப்படும்.



அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி தமிழகத்தில் 412 நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இதில் 3200 ஆசிரியர்-ஆசிரியைகள் இடம் பெற்று கற்றுக் கொடுப்பார்கள். மாணவ-மாணவிகளுக்கு காணொலி காட்சி மூலம் நீட் பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

விழாவில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், சத்தி நகராட்சி கமி‌ஷனர் சுபா, துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #MinisterSenkottaiyan  #NEETexam #NEETtraining
Tags:    

Similar News