செய்திகள்
பொதுமக்களுக்கு துணி மற்றும் சணல் பைகளை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் வழங்கினார்

வி‌ஷத்தை விட பிளாஸ்டிக் பைகள் நச்சுத்தன்மையானது - பொதுமக்களுக்கு போலீஸ் அதிகாரி அறிவுரை

Published On 2018-08-29 07:02 GMT   |   Update On 2018-08-29 07:02 GMT
அதிக நச்சுத்தன்மை கொண்ட வி‌ஷத்தை விட அபாயகரமான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு போலீஸ் அதிகாரி அறிவுரை கூறினார். #Plasticban
ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் சணல், துணிப்பைகள் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயகுமார் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் பாலு முன்னிலை வகித்தார்.

துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு துணி மற்றும் சணல் பைகளை வழங்கினார் அப்போது அவர் பேசியதாவது:-



பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் கேன்சர் போன்ற கொடிய நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வீசி விடுவதால் அவை பூமியில் மக்காமல் அப்படியே இருந்து விட்டு சுற்றுப்புற சூழலை பாழாக்கி விடுகிறது.

அதிக நச்சுத்தன்மை கொண்ட வி‌ஷத்தை விட அதிக அபாயகரமான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

அதற்கு மாற்றாக சணல் மற்றும் துணிப்பைகளை பயன்படுத்தினால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கும் எந்தவித கெடுதல் ஏற்படாது.

இவ்வாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் பேசினார்.

நிகழ்ச்சியில் இளநிலை உதவியாளர்கள் சிவசங்கரன், மோகனகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Plasticban
Tags:    

Similar News