செய்திகள்

ஸ்டெர்லைட் பிரச்சினையை அரசியலாக்கி பார்க்கக்கூடாது- கடம்பூர் ராஜு பேட்டி

Published On 2018-08-22 13:58 GMT   |   Update On 2018-08-22 13:58 GMT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையை அரசியலாக்கி பார்க்கக் கூடாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். #sterliteissue
கோவில்பட்டி:

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது  அவர் கூறியதாவது: -

பொதுமக்களின் உணர்வுகளுக்கும், போராட்டத்துக்கும் மதிப்பு அளித்து, பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம் 9-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டது. எனினும் பொதுமக்களின் போராட்டம் 100 நாட்கள் நடந்தது. 100வது நாள் போராட்டத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன. இதில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து, முதல்அமைச்சரிடம் தெரிவித்து, அவர்களுக்கு அரசின் நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டது. 

போராட்ட குழுவினரை முதல் அமைச்சருடன் சந்திக்க வைத்தது மட்டுமின்றி, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம், தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு சென்று, ஆலை நிர்வாக பயன்பாட்டுக்கு அனுமதி பெற்ற போதும், தமிழக அரசு அதனை ரத்து செய்யக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இது தெரியாமல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பேசி வருகிறார். 

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்றபோது, தமிழக அரசு எடுத்த நிலைப்பாட்டில் பசுமை தீர்ப்பாயம் தலையிடக் கூடாது என்று அரசு வக்கீல்கள் வலியுறுத்தினர். இந்த நேரத்தில் ஸ்டெர்லைட் பிரச்சினையை அரசியலாக்கி பார்க்க கூடாது. 

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார். #sterliteissue
Tags:    

Similar News