செய்திகள்

வேலூர்-திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 சதவீத பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை

Published On 2018-08-07 04:55 GMT   |   Update On 2018-08-07 04:55 GMT
மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தைக் கண்டித்து வேலூர்-திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 சதவீத பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை. #MotorVehicleStrike #MotorVehicleAmendmentBill

வேலூர்:

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மோட்டார் தொழில் தொடர்புடைய அனைத்து சங்க கட்டமைப்புகளும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. வேலூர் மாவட்டத்தில் 20 சதவீதம் ஆட்டோ, வேன்கள் இன்று ஓடவில்லை.

போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சேர்ந்த அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நேற்று இரவு 50 சதவீதத்துக்கு அதிகமான பஸ்கள் ஓடவில்லை. இன்று காலை 20 சதவீத அரசு பஸ்கள் இயக்கபடவில்லை.

ஆனால் அரசு பஸ்கள் அனைத்தும் இயக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கிராமபுறங்களுக்கு செல்லும் சில பஸ்கள் நிறுத்தபட்டுள்ளன.

வேலூர், அரக்கோணம், வாலாஜா, ஆற்காடு, ராணிப்பேட்டை, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் உள்ளிட்ட நகர் புறங்களில் பஸ் போக்குவரத்து பாதிப்பு இல்லை. ஆட்டோக்கள் ஓடாததால் பொதுமக்கள் பாதிக்கபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்டோ பஸ்கள் வழக்கம் போல் ஓடியது.

Tags:    

Similar News