செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக இருக்கும்- வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி

Published On 2018-07-29 14:13 GMT   |   Update On 2018-07-29 14:13 GMT
வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக இருக்கும் என்று வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். #parliamentelection
பெரம்பலூர்:

பாராளுமன்ற தேர்தல் பூத்  கமிட்டி அமைப்பது குறித்த பெரம்பலூரில் நடந்த மாவட்ட  அ.தி.மு.க. செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து  கொண்ட பின்னர் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், எம். பி.யுமான வைத்திலிங்கம் நிருபர்களிடம்    கூறியதாவது:- 

திருப்பதி ஏழுமலையான் குமாரசாமிக்கு நல்ல புத்தியை கொடுக்கவேண்டும், நிலத்தோட அமைப்பில் காவிரி உபரிநீரை தேக்கி வைக்க முடியாது. அதனால் நிபுணர்களை கேட்டபோது அவற்றை தேக்கி வைக்க முடியாது. எனவே ஏரி, குளம், குட்டைகளில் மட்டுமே நீரை தேக்கி வைக்க முடியும் என தெரிவித்துள்ளனர். 

தி.மு.க. தலைவர் கருணாநிதி பூரண நலம் பெறுவார். அவரை விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று சந்திப்பார். தி.மு.க. கட்சியை எதிர் கட்சியாகவே நாங்கள் நினைக்க வில்லை. அதனால் தி.மு.க. பிளவுபட்டாலும்,  பிளவுபாடாவிட்டாலும் நாங்கள் கவலை கொள்வதில்லை. 

வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அ.தி.மு.க. இருக்கும் என்றார். 

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ஆர்.டி. ராமச்சந்திரன், எம்.பி.க்கள் மருதராஜா, சந்திரகாசி, எம்.எல்.ஏ. தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர். #parliamentelection
Tags:    

Similar News