செய்திகள்
லாரி மோதியதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கி கிடப்பதை படத்தில் காணலாம்.

திண்டிவனம் அருகே விபத்து- 2 பேர் பலி

Published On 2018-07-11 12:03 IST   |   Update On 2018-07-11 12:03:00 IST
திண்டிவனம் அருகே இன்று காலை கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திண்டிவனம்:

கடலூர் மஞ்சக்குப்பம் சுதர்சனநாயுடு தெருவை சேர்ந்தவர் காசிம். இவரது மகன் முபாரக்(வயது 24). இவரது நண்பர் சிவக்குமார்(22).

முபாரக், சிவக்குமார் ஆகியோர் ஒரு காரில் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

இன்று காலை 7 மணியளவில் அந்த கார் திண்டிவனம் அடுத்த பாதிரி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தது. திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

பின்னர் அந்த கார் சாலையின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டையை தாண்டி எதிர்திசையை நோக்கி சென்றது. அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வந்தது. அந்த லாரி இந்த கார் மீது பயங்கரமாக மோதியது.

இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. விபத்தில் காரில் இருந்த முபாரக், சிவக்குமார் ஆகியோர் அதே இடத்தில் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News