செய்திகள்
டி.டி.வி. தினகரன் கிரிவலம் சென்ற காட்சி.

8 வழிச்சாலை போராட்டத்திற்கு வந்த தினகரன், திருவண்ணாமலையில் கிரிவலம்

Published On 2018-07-06 04:28 GMT   |   Update On 2018-07-06 04:28 GMT
திருவண்ணாமலையில் இன்று மாலை நடைபெறும் 8 வழிச்சாலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த டி.டி.வி. தினகரன் கிரிவலம் சென்றார்.
திருவண்ணாமலை:

சென்னை- சேலம் பசுமைச்சாலையை எதிர்த்து திருவண்ணாமலையில் அண்ணாசிலை அருகே அ.ம.மு.க. சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அதில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொள்கிறார். இதையொட்டி நேற்றிரவு தினகரன் திருவண்ணாமலைக்கு வந்தார்.

கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோவில், அஷ்டலிங்க சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். அதை தொடர்ந்து அவர் கிரிவலம் சென்றார். அப்போது சேஷாத்திரி ஆஸ்ரமத்தில் இருந்த மூக்கு பொடி சித்தரிடம் ஆசி பெற்றார்.

இது குறித்து தினகரன் கூறியதாவது:- கடந்த 25 ஆண்டுகளாக திருவண்ணாமலைக்கு வந்து கொண்டிருக்கிறேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கிரிவலம் செல்வது வழக்கம் அதன்படி தான் இன்றும் கிரிவலம் சென்றேன் என்றார்.

பசுமை வழி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க. சார்பில் திருவண்ணாமலையில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெறும் நிலையில் இந்த திட்டத்தை ஆதரித்து நாளை அ.தி.மு.க. சார்பில் ஆதரவு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், சேவூர் ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். #TTVDhinakaran
Tags:    

Similar News