செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க விட மாட்டோம்: ஜான் பாண்டியன் பேட்டி

Published On 2018-07-05 18:10 IST   |   Update On 2018-07-05 18:10:00 IST
ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் ஒரு போதும் இயங்க விட மாட்டோம் என்று ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். #johnpandian #thoothukudiplant

ஈரோடு:

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இன்று காலை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்த ஜான் பாண்டியன் அங்கு எஸ்.பி.சக்திகணேசனை சந்தித்து பேசினார்.

அப்போது தனது ஈரோடு மாவட்ட சுற்றுப்பயணத்தில் சிறப்பாக போலீஸ் பாதுகாப்பு கொடுத்த எஸ்.பி.க்கு அவர் நன்றி தெரிவித்தார்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வரும் 15-ந்தேதி தஞ்சையில் மாநில மாநாடு நடக்கிறது. இதை சிறப்பாக நடத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். ஈரோடு மாவட்டத்திலும் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன்.

பசுமை வழிசாலை திட்டத்தை ஒருபுறம் மக்கள் எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மறுபுறம் அரசும் அதை அமைத்து தீர்வோம் என போராடி வருகிறது.

இந்த விவகாரத்தில் அரசு வெள்ளை அறிக்கை (உண்மை நிலை)யை வெளியிட வேண்டும். காவிரி பிரச்சினையில் கர்நாடகம் உச்ச நீதிமன்றத்தை மதிக்காமல் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. இந்த வி‌ஷயத்தில் உச்சநீதி மன்றம் இனியும் மவுனம் காட்டக் கூடாது.

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை பற்றி நான் முன்னமே தமிழக முதல்வரை சந்தித்து அதை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினேன். இப்போது மூடப்பட்டுள்ளது.

மீண்டும் ஆலையை இயக்க நிர்வாகம் முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது. மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் ஒரு போதும் இயங்க விட மாட்டோம்.

இவ்வாறு ஜான் பாண்டியன் கூறினார்.  #johnpandian #thoothukudiplant

Tags:    

Similar News