செய்திகள்

புழல் ஜெயிலில் 3 கைதிகளிடம் செல்போன் பறிமுதல்

Published On 2018-07-05 07:31 GMT   |   Update On 2018-07-05 07:31 GMT
புழல் ஜெயிலில் இன்று காலை 3 கைதிகளிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.
செங்குன்றம்:

புழல் ஜெயிலில் போலீசாரின் தீவிர கண்காணிப்பையும் மீறி கைதிகள் சர்வ சாதாரணமாக செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள்.

கைதிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை 3 கைதிகளிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.

ஜெயில் அறையில் இருந்த கைதிகளை சிறைக்காவலர்கள் கண்காணித்தனர். அப்போது நீலாங்கரையை சேர்ந்த கஞ்சா வழக்கில் கைதான கார்த்திக், வழிப்பறி வழக்கில் கைதான கோயம்பேட்டை சேர்ந்த விஜயகுமார், முத்தையால் பேட்டையை சேர்ந்த கணேஷ்லிங்கம் ஆகியோர் செல்போனில் பேசிக் கொண்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், சிம்கார்டு, சார்ஜர், பேட்டரி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களுக்கு செல்போன் கிடைத்தது எப்படி? யாரிடம் பேசினார்கள்? செல்போன் கிடைக்க உதவிய ஜெயில் அதிகாரி யார்? என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews
Tags:    

Similar News