செய்திகள்

நடைபயிற்சி சென்ற பீரோ பட்டறை அதிபர் விபத்தில் பலி

Published On 2018-07-04 10:08 IST   |   Update On 2018-07-04 10:08:00 IST
அரூர்-கொலகம்பட்டி ரோட்டில் நடைபயிற்சி சென்ற பீரோ பட்டறை அதிபர் மீது கிரேன் வாகனம் மோதிய விபத்தில் பலியானார். இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அரூர்:

தருமபுரி மாவட்டம், அரூர் மேல்பாட்ஷா பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா (வயது45) பீரோ பட்டறை அதிபர்.

இவர் தினந்தோறும் நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம். இன்று காலை அரூர்-கொலகம்பட்டி ரோட்டில் நடைபயிற்சி முடித்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது இவரது பின்னால் வந்த கிரேன் வாகனம் இவர் மீது மோதியது. இதில் இவரது சட்டை மற்றும் உடலில் கிரேன் கொக்கி மாட்டி 10 அடி தூரத்திற்கு இழுத்து சென்றது. இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த விபத்து குறித்து அரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலேஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News