சினிமா செய்திகள்

'மீசைய முறுக்கு 2' படத்தின் முதல் பாடல் வெளியீடு!

Published On 2026-03-04 20:56 IST   |   Update On 2026-03-04 20:56:00 IST
  • ஹிப்ஹாப் தமிழா ஆதியே இயக்கி, இசையமைக்கிறார்.
  • யூடியூபர் ஹர்ஷத்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

குஷ்பு சுந்தர் தயாரிப்பில், கடந்த 2017ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நடித்திருந்த படம் மீசைய முறுக்கு. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தைப் போலவே இதையும் ஹிப்ஹாப் தமிழா ஆதியே இயக்கி, இசையமைக்கிறார்.

இப்படத்தையும் குஷ்பு சுந்தரின் அவ்னி மூவிஸ் மற்றும் ஏ.சி.எஸ் அருண்குமாரின் பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் ஆதியுடன் இணைந்து பிரபல யூடியூபர் ஹர்ஷத் கான், சைத்ரா ஜே. ஆச்சார், கேத்திகா சர்மா, ரம்யா ரங்கநாதன், நாசர், கருணாஸ், ஷா ரா மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்.

சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இன்று படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் Aura 10/10 வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துவருகிறது. 

Full View


Tags:    

Similar News