செய்திகள்

ஸ்ரீரங்கம் மாநகராட்சி பூங்காவில் ஜெயலலிதா சிலை வைக்கவேண்டும் - அனுமதி கோரி ஐகோர்ட்டில் மனு

Published On 2018-06-20 09:31 GMT   |   Update On 2018-06-20 09:31 GMT
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஸ்ரீரங்கத்தில் சிலை வைக்க அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #JayaStatue
மதுரை:

தமிழக முதலமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு பிரமாண்டமான நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



கட்சி தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஜெயலலிதாவின் சிலைகளை தங்கள் பகுதிகளில் திறக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அவ்வகையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மாநகராட்சி பூங்காவில் ஜெயலலிதா சிலை வைக்க அனுமதி கோரி உயர்நீதிமன்ற கிளையில் இன்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக திருச்சி ஆட்சியரிடம் விளக்கம் பெற்று கோர்ட்டில் தெரிவிக்கும்படி அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். #JayaStatue

Tags:    

Similar News