சினிமா செய்திகள்
OTT-யில் வெளியாகும் "வா வாத்தியார்"
- சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
- இப்படம் பொங்கலையொட்டி கடந்த 14-ந்தேதி வெளியானது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளியான படம் "வா வாத்தியார்". இந்தப் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர் தமிழில் எல்.ஐ.கே., ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கார்த்தியின் 26-வது படமான இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்தது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கலையொட்டி கடந்த 14-ந்தேதி வெளியான நிலையில், ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில், "வா வாத்தியார்" படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, "வா வாத்தியார்" படம் நாளை (ஜன.28) அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.