செய்திகள்

மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலுக்கு 3 அடி உயர அணையா விளக்கு

Published On 2018-06-15 11:03 IST   |   Update On 2018-06-15 11:03:00 IST
மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலுக்கு 3 அடி உயரத்தில் 160 கிலோ எடை கொண்ட அணையா விளக்கு சுவாமிமலையில் இருந்து அனுப்பப்படுகிறது.
சுவாமிமலை:

மலேசிய நாட்டில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக தற்போது திருப்பணிகள் நடந்து வருகிறது.

இந்த கும்பாபிஷேகத்தின் போது கோவில் மூலவர் சன்னதிக்கு எதிரே அணையா விளக்கு அமைக்க அந்நாட்டை சேர்ந்த முருக பக்தர் சாமுவேல் சண்முகநாதன் என்பவர் முடிவு செய்கார்.

இந்த பணியை தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் உள்ள தனியார் சிற்பக் கூடத்தினரிடம் ஒப்படைத்தார்.

அதன்படி சிற்ப கூட ஸ்தபதிகள் ரூ.4½ லட்சம் செலவில் 3 அடி உயரத்தில் 160 கிலோ எடையில் அணையா விளக்கு தயாரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த அணையா விளக்கு இன்னும் சில நாட்களில் மலேசியாவுக்கு அனுப்பி வைக்க உள்ளது. #Tamilnews
Tags:    

Similar News