செய்திகள்

வண்டலூர் அருகே வெளிநாட்டு மாணவியை கற்பழிக்க முயற்சி- 2 பேர் கைது

Published On 2018-06-13 10:36 IST   |   Update On 2018-06-13 10:36:00 IST
வண்டலூர் அருகே நடைபயிற்சி மேற்கொண்ட வெளிநாட்டு மாணவியை கற்பழிக்க முயன்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
செங்கல்பட்டு:

சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நைஜீரிய நாட்டை சேர்ந்த 25 வயது இளம்பெண் மேற்படிப்பு படித்து வருகிறார்.

இவர் வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி பகுதியில் தங்கியுள்ளார். நேற்று மாலையில் மாணவி நடைபயிற்சி மேற்கொண்டார்.

அப்போது அங்குள்ள முட்புதர் நிறைந்த பகுதியில் 2 வாலிபர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் நைஜீரிய மாணவியை பார்த்ததும் அருகில் சென்று பேச்சு கொடுத்தனர்.

திடீரென இருவரும் சேர்ந்து அவரது வாயை பொத்தி புதர் மண்டிய பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சல் போட்டார். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு வந்து சத்தம் கேட்ட இடத்தை நோக்கி ஓடினர்.

அப்போது 2 வாலிபர்களும் போதை தலைக்கேறிய நிலையில் மாணவியிடம் தகாத முறையில் நடந்து கற்பழிக்க முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் வாலிபர்களை பிடித்து அடித்து உதைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் 2 பேரையும் ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஒருவரது பெயர் தமிழரசன், இன்னொருவரது பெயர் ஜெயவேல் என்பது தெரிய வந்தது. காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த தமிழரசன், திருவல்லிக்கேணியில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

ஜெயவேல் ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர். நண்பரான இவரை பார்ப்பதற்கு நேற்று மாலையில் தமிழரசன் சென்றுள்ளார். அப்போது தான் 2 பேரும் சேர்ந்து மது குடித்துவிட்டு போதையில் கற்பழிப்பு முயற்சியில் ஈடுபட்டது அம்பலமானது.

2 பேரையும் கைது செய்த போலீசார் பெண்கள் வன்கொமை தடுப்பு சட்டம், கற்பழிக்க முயற்சி செய்தது உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். #Tamilnews
Tags:    

Similar News