செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு - 3 துணை தாசில்தார்களை வழக்கில் சேர்க்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

Published On 2018-06-06 07:47 GMT   |   Update On 2018-06-06 07:52 GMT
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட துணை தாசில்தார்கள் 3 பேரையும் வழக்கில் சேர்க்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiFiring #ThoothukudiFiringOrder #MaduraiHighCourt
மதுரை:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந் தேதி நடைபெற்ற 100-வது நாள் போராட்டம் கலவரமாக வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும், துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில்  பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்த முடியாது என தெரிவித்தனர்.



‘தூத்துக்குடியில் துப்பாக்கிடு நடத்தப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அதை நியாயப்படுத்த முடியாது. இதற்கு உத்தரவிட்ட கண்ணன், சந்திரன், சேகர் ஆகிய மூன்று துணை தாசில்தார்களையும் வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த மூன்று பேரும் பதில் மனு தாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். #ThoothukudiFiring #ThoothukudiFiringOrder #MaduraiHighCourt
 
Tags:    

Similar News