தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு எதிர்ப்பு - சேலத்தில் போராட்டம் நடத்திய 3 பேர் சிறையில் அடைப்பு
சேலம்:
சேலம் தலைமை தபால் நிலையம் அருகே கடந்த 26-ந் தேதி மார்க்சிஸ்டு லெனினிஸ்டு மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் கையில் வைத்திருந்த பிளக்ஸ் பேனரில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் படங்கள் இடம் பெற்றிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போலீசார் அவர்களிடம் இருந்து அந்த பிளக்ஸ் பேனரை பிடுங்க முயன்றனர்.
அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் மணிமாறன், செல்வக்குமார், மூர்த்தி ஆகிய 3 பேரை நேற்று கைது செய்த டவுன் போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.#SterliteProtest #BanSterlite