செய்திகள்

புழல் ஜெயிலில் டைரக்டர் கவுதமன் உண்ணாவிரதம்

Published On 2018-05-25 05:21 GMT   |   Update On 2018-05-25 05:21 GMT
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி புழல் ஜெயிலில் டைரக்டர் கவுதமனுடன் சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். #SterliteProtest
சென்னை:

ஸ்டெர்லைட் அதிபரின் கொடும்பாவியை எரித்ததாக கைதான டைரக்டர் கவுதமன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று காலை முதல் ஜெயிலில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ள அதிரடி படையினரை உடனே வெளியேற்ற வேண்டும். உயிர் கொல்லி நச்சு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக இழுத்து மூடவேண்டும்.

தூத்துக்குடியில் மக்கள் சுட்டுக்கொல்லப்பட காரணமான ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் கொலை வழக்கின்கீழ் கைது செய்ய வேண்டும். கொல்லப்பட்ட மக்களுக்கு ரூ.2 கோடி வழங்க வேண்டும்.

ஓய்வுபெற்ற நீதிபதியின் விசாரணை ஆணையத்தை ரத்து செய்துவிட்டு பணியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கவுதமனுடன் சில அமைப்புகளை சேர்ந்தவர்களும் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.  #SterliteProtest
Tags:    

Similar News