செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு தடை விதித்தது ஐகோர்ட் மதுரை கிளை

Published On 2018-05-23 11:59 IST   |   Update On 2018-05-23 11:59:00 IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. #SterliteProtest #SterliteCaseVerdict
மதுரை:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது. போராட்டக்காரர்களை கலைக்க எவ்வளவோ யுக்திகள் இருந்தும், தேச விரோதிகளை சுடுவது போன்று சரமாரியாக சுட்டது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.



ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேராசிரியை பாத்திமா வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ஸ்டெர்லைட் ஆலையின் 2வது பிரிவு அனுமதி பெறப்பட்ட இடத்தில் தொடங்கப்படாததால் விரிவாக்கப் பணியை நிறுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். ஆலை விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்களின் கருத்தையும் நிர்வாகம் கேட்கவில்லை என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இவ்வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளை நிறுத்தும்படி நீதிபதிகள் சுந்தர், அனிதா சுமந்த் இன்று உத்தரவிட்டனர். மேலும், ஆலையை நடத்துவதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை மத்திய அரசு பிரிசீலித்து 4 மாதங்களில் முடிவு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். #SterliteProtest #SterliteCaseVerdict
Tags:    

Similar News