செய்திகள்
சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளையர்களால் உடைக்கப்பட்ட பீரோவை படத்தில் காணலாம்.

ஆண்டிப்பட்டி அருகே சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

Published On 2018-05-19 12:07 IST   |   Update On 2018-05-19 12:07:00 IST
ஆண்டிப்பட்டியில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடுகிறார்கள்.
ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கு பகுதியைச் சேர்ந்தவர் அம்மாவாசி (வயது 47). பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். இவர் தனது குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றார். முன்னதாக ஊருக்கு செல்லும் விபரத்தை தனது உறவினரிடம் கூறியிருந்தார்.

எனவே உறவினர்கள் காலை, மாலை நேரத்தில் அம்மாவாசி வீட்டை பாதுகாத்து வந்தனர். அதன்படி இன்று காலை உறவினர்கள் அம்மாவாசி வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்து நகை-பணத்தை காணவில்லை.

கொள்ளை போன நகை- பணம் விபரம் அம்மாவாசி திருப்பதியில் இருந்து வந்தால்தான் தெரியும். இது குறித்து க.விலக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்ததும் மோப்ப நாய் பென்னி தேனியில் இருந்து வரவழைக்கப்பட்டது. அந்த நாய் வீட்டில் இருந்து சாலை ஓரம் வரை சென்று நின்றது. எனவே கொள்ளையர்கள் அந்த வழியாக தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

கொள்ளையர்கள் குறித்த துப்பு துலக்க கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
Tags:    

Similar News