இந்தியா

இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.22 கோடி அபராதம் விதித்த மத்திய அரசு

Published On 2026-01-18 00:12 IST   |   Update On 2026-01-18 00:12:00 IST
  • இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனத்தில் ஒன்று இண்டிகோ விமான நிறுவனம்.
  • கடந்த மாதம் தாமதங்கள் மற்றும் சேவை ரத்தால் பயணிகளுக்கு இன்னல்களை ஏற்படுத்தியது.

புதுடெல்லி:

இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோ கடந்த மாதம் தாமதங்கள் மற்றும் சேவை ரத்துகளால் பயணிகளுக்கு இன்னல்கள் ஏற்படுத்தியது.

ஊழியர்களின் பணி நேரத்தைஅளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தியது, போதிய மாற்றுத் திட்டங்கள் இல்லாதது, மேலாண்மை குறைபாடுகள் ஆகியவற்றால் சுமார் 2,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் லட்சக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களிலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், இந்தக் குறைபாடுகளை ஆராய்ந்த வான்வழிப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், முறையான திட்டமிடல் இல்லாததற்காக ரூ.1.80 கோடியும், தொடர்ந்து 68 நாட்களாக விதிமுறைகளை மீறியதற்காக நாளொன்றுக்கு ரூ.30 லட்சம் வீதம் ரூ.20.40 கோடியும் என மொத்தம் ரூ. 22.20 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டது.

இப்படி ஒரு பெரிய தொகையை அபராதமாக விதிப்பது இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் இது முதல் முறை ஆகும்.

Tags:    

Similar News