செய்திகள்

எம்.ஜி.ஆர். ஆட்சி அமைக்க தனிக்கட்சி தொடங்குவேன்- சசிகலா உறவினர் பாஸ்கரன் பேட்டி

Published On 2018-05-14 10:07 IST   |   Update On 2018-05-14 10:07:00 IST
எம்.ஜி.ஆர். ஆட்சி அமைக்க விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன் என்று பொள்ளாச்சியில் சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி:

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

இதில் சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசியலில் ஊழல் அதிகரித்துவிட்டது. எம்.ஜி.ஆரை போல யாராலும் ஆட்சியை வழங்க முடியாது. ஆகவே எம்.ஜி.ஆர். ஆட்சி அமைக்க விரைவில் தனிக்கட்சி தொடங்க உள்ளேன்.

இதற்காக தமிழகம் முழுவதும் சென்று ஆதரவாளர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறேன். ஆதரவாளர்கள் கருத்துப்படி விரைவில் கட்சி தொடங்குவேன்.

இவ்வாறு அவர் பேசினார். #Tamilnews
Tags:    

Similar News