செய்திகள்
சாமி

மதுரையில் முன்னாள் எம்.எல்.ஏ. சாமி உடல்நிலை கவலைக்கிடம்

Published On 2018-05-10 16:15 IST   |   Update On 2018-05-10 16:15:00 IST
மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சாமியின் உடல்நிலை இன்று காலை மோசமானது.
மதுரை:

மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சாமி கடந்த சில மாதங்களாக உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

கடந்த வாரம் பாதிப்பு அதிகமாகவே மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 4 நாட்களாக இயல்பு நிலையில் இருந்த சாமியின் உடல்நிலை இன்று காலை மோசமானது.

உடனே அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் இன்று மதியம் வரை அவர் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க.வின் தீவிர தொண்டரான மேலூர் சாமி, மேலூர் நகராட்சியில் கவுன்சிலராக இருந்து பின்னர் அ.தி.மு.க. நகரச் செயலாளராக பணியாற்றியவர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான இவர், மேலூர் தொகுதியில் 3 முறை அடுத்தடுத்து போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா மறைவிற்கு பின் தற்போது சாமி தினகரன் அணியில் அமைப்பு செயலாளராக உள்ளார். #Tamilnews
Tags:    

Similar News