செய்திகள்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்த 10 பேர் கைது

Published On 2018-05-02 07:12 GMT   |   Update On 2018-05-02 07:12 GMT
கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்த 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னை கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, கோவை, திருச்சி, தஞ்சை, சேலம், நாகை, பெங்களூர் ஆகிய இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சென்னையில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர். இதை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பஸ்களில் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து போலீசார் ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தினர். அப்போது சில ஆம்னி பஸ்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஆம்னி பஸ் ஊழியர்கள் நெடுங்குன்றம் அவினாஸ் இனயதுல்லா, முகப்பேர் தினேஷ், வில்லிவாக்கம் அப்துல் காதர், புதுப்பேட்டை இலியாஸ், கோயம்பேடு முகம்மதுகான், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு ஷாஜி ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

மேலும் ஆம்னி பஸ் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்றதாக வெங்கடேசன், பிரசன்னகுமார், ஜெயபிரகாஷ், ராஜாராம் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். #tamilnews

Tags:    

Similar News