விவசாயத்துக்கு எதிரான எந்த திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம்- சி.வி.சண்முகம் பேட்டி
விழுப்புரம்:
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பு சரியானது.
விவசாயத்துக்கு எதிராக ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டங்களையும் தமிழகத்துக்கு மத்திய அரசு கொண்டு வந்தால் அதனை முழுமையாக எதிர்ப்போம். தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம்.
தொடர்ந்து அவதூறாக பேசி வரும் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, பெண் பத்திரிகையாளர்களை விமர்சித்து கருத்து வெளியிட்ட பா.ஜ.க. நிர்வாகி நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #cvshanmugam