செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை மூடாமல் விடமாட்டேன் - வைகோ

Published On 2018-03-26 11:53 IST   |   Update On 2018-03-26 11:53:00 IST
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முதன் முதலாக குரல் கொடுத்தவன் நான் தான். ஸ்டெர்லைட் ஆலையை மூடாமல் விட மாட்டேன் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் இன்று பங்கேற்க வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதா வது:-

தி.மு.க.வின் ஈரோடு மாநாடு மிகப்பெரிய வெற்றி சரித்திரம் படைத்துள்ளது. தமிழகத்தை பாலைவனமாக ஆக்க வேண்டும் என்பதற்காகத்தான் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. கண்டிப்பாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது.



காவிரி பிரச்சினை அரசியல் சாசன அமர்விற்கு சென்றால் தான் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். தமிழக அரசு மக்களை ஏமாற்றக்கூடாது.

ஆதிதிராவிடர்களின் நலனுக்காக போராடும் ஒரே தலைவர் வைகோ தான். ஒரு அமைச்சர் ஒரு சில பேரை தூண்டிவிட்டு எனக்கு எதிராக பிரச்சினை செய்ய கூறியுள்ளார். எதிர்ப்பு இருந்தால் தான் நான் வளர முடியும்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முதன் முதலாக குரல் கொடுத்தவன் நான் தான். இதற்கான நீதிமன்றமும் சென்றேன். தற்போது மக்கள் தன் எழுச்சியாக போராடி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை நான் மூடாமல் விட மாட்டேன். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் பலர் இன்று காணாமல் போய்விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Similar News