செய்திகள்
கூடங்குளத்தில் 3-வது அணுஉலை இந்த ஆண்டுக்குள் செயல்பட தொடங்கும் - இந்திய அணுசக்தி கழக தலைவர்
கூடங்குளத்தில் 3-வது அணுஉலை இந்த ஆண்டுக்குள் செயல்பட தொடங்கும் என்று இந்திய அணுசக்தி கழக தலைவர் சேகர்பாசு தெரிவித்தார்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இந்திய அணுசக்தி கழக தலைவர் சேகர்பாசு நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போது கூடங்குளத்தில் 1 மற்றும் 2-வது அணு உலைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இரு உலைகளிலும், 1,000 மெகாவாட் வீதம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்குள் (2018) மூன்றாவது அணு உலை செயல்பட தொடங்கும். இவ்வாறு ஆண்டிற்கு ஒரு அணு உலை வீதம் மொத்தம் உள்ள 6 அணு உலைகளும் செயல்பாட்டுக்கு வந்துவிடும். இதன்மூலம் கூடங்குளத்தில் 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
நாடு முழுவதும் ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத், அரியானா உள்பட 16 இடங்களில் அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews