செய்திகள்

வேதாரண்யம் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின் மீன்

Published On 2018-02-09 17:43 IST   |   Update On 2018-02-09 17:43:00 IST
வேதாரண்யம் கடற்கரையில் இறந்த நிலையில் டால்பின் மீன் கரை ஒதுங்கியதை கேள்விப்பட்டு மீனவ கிராம மக்களும் வந்து பார்வையிட்டு சென்றனர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மணியன் தீவு என்ற இடம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள கடலில் டால்பின் மீன்கள் அதிகளவில் உள்ளன. இந்த நிலையில் இன்று காலை ஒரு டால்பின் மீன் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடம் சென்று அந்த டால்பின் மீனை பார்வையிட்டனர்.

இறந்து கிடந்த டால்பின் மீன் 200 கிலோ எடையுடன் 5 அடி நீளம் கொண்டதாக இருந்தது. பின்னர் டால்பினை வனத்துறையினர் மீட்டு கடற்கரையில் புதைத்தனர்.

கடற்கரையில் இறந்த நிலையில் டால்பின் மீன் ஒதுங்கியதை கேள்விப்பட்டு மீனவ கிராம மக்களும் வந்து பார்வையிட்டு சென்றனர். #tamilnews

Similar News