செய்திகள்

காஞ்சீபுரம் அருகே ஆக்கிரமித்து கட்டிய 15 வீடுகள் இடிப்பு

Published On 2017-12-28 14:56 IST   |   Update On 2017-12-28 14:59:00 IST
காஞ்சீபுரம் அருகே பெரும்பாக்கம் செல்லும் சாலையில் ஆக்கிரமித்து கட்டிய 15 வீடுகளை நெடுஞ்சாலைத் துறையினர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து தள்ளினர்.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் அருகே பெரும்பாக்கம் செல்லும் சாலையில் ஏராளமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளன. இதனால் சாலை மிகவும் குறுகலாக உள்ளது.

இதையடுத்து காஞ்சீபுரம் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை விரிவாக்கம் பணி செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக சாலையில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை அகற்ற நோட்டீஸ் அளித்திருந்தனர்.

ஆனால் யாரும் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றவில்லை. இந்த நிலையில் நெடுஞ்சாலைத் துறையினர் சுமார் 15 வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து தள்ளினர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

Similar News