செய்திகள்
கோடியக்கரை அருகே சேற்றில் சிக்கி தரை தட்டி நின்ற மினி கப்பல்.

வேதாரண்யம் அருகே தரை தட்டி நின்ற மினி கப்பல்: அதிகாரிகள் விசாரணை

Published On 2017-09-25 10:22 GMT   |   Update On 2017-09-25 10:22 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மினி கப்பல் தரை தட்டி நின்றது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை மீன் பிடி துறைமுகத்திற்கு மேற்கே கம்போஸ் என்ற இடத்தில் கடல் கரையில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் மினி கப்பல் சேற்றில் தரை தட்டி நின்றது.

அதில் தேசிய கொடி பறந்தது. இந்தியில் எழுதப்பட்டு உள்ளது. மினி கப்பலில் 10 பேர் வரை இருந்தனர்.

இது குறித்து வேதாரண்யம் போலீசாருக்கும், கடலோர காவல் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வேதாரண்யம் டி.எஸ்.பி. பாலு மற்றும் கடலோர காவல் படையினர், மீன் வளத்துறையினர், வனத்துறையினர் படகில் அங்கு சென்றனர்.

அவர்கள் நடத்திய விசாரணையில் இது கடற்கரையில் மணலை தூர்வாரும் கப்பல் என்பது தெரிய வந்தது. நாகையில் இருந்து மண்டபத்திற்கு சென்ற போது கோடியக்கரை அருகே சேற்றி சிக்கி விட்டது.

அதனை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News