செய்திகள்

தமிழகத்தில் பா.ஜனதாவின் பொம்மை ஆட்சிதான் நடக்கிறது: பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி பேட்டி

Published On 2017-08-30 12:15 IST   |   Update On 2017-08-30 12:15:00 IST
தமிழகத்தில் பா.ஜனதாவின் பொம்மை ஆட்சிதான் நடக்கிறது என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கும்மிடிப்பூண்டி:

விழுப்புரத்தில் பா.ம.க. சார்பில் செப்டம்பர் 17-ந் தேதி சமூக நிதி மாநாடு நடைபெறுகிறது. மாநாடு குறித்தும், கட்சியின் வளர்ச்சி மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆலோசனைக் கூட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் எம்.செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் துரை.ஜெயவேலு, மாவட்ட செயலாளர் குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கட்சியின் மாநிலத்தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியலில் ஒரு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலை போக்குவதற்கு கவர்னர் இங்கேயே இருக்க வேண்டும்.

மத்திய அரசு என்ன நினைக்குதோ அதனுடைய பொம்மையாகதான் தமிழக அரசு செயல்படக்கூடிய நிலைமை உள்ளது.

இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.

Similar News