செய்திகள்
கிணற்றில் குதித்த சித்ராவின் உடலை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்ட காட்சி.

போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடி 150 அடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சித்ரா

Published On 2017-07-21 05:23 GMT   |   Update On 2017-07-21 05:23 GMT
பண்ருட்டி அருகே காதலர்களை அபகரித்ததால் நர்சை கொன்று புதைத்த தோழி கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பண்ருட்டி:

தனது காதலர்களை அபகரித்ததால் நர்சு திவ்யாவை கிணற்றில் தள்ளி கொலை செய்ய சித்ரா முடிவு செய்தார். அதற்காக கீழ்காங்கயம் குப்பத்தில் உள்ள ஒரு கிணற்றை தேர்ந்தெடுத்தார்.

இதற்காக தனது காதலன் மோகனுடன் திவ்யாவை மோட்டார் சைக்கிளில் 8-ந் தேதி காலை அந்த கிணற்றுக்கு அழைத்து சென்றார். கிணற்றில் தள்ளி கொன்றால் துர்நாற்றம் வீசும், அதன் மூலம் போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என நினைத்தார். எனவே அந்த திட்டத்தை கைவிட்டார். எனவே அடுத்த திட்டத்தை கையில் எடுத்தார்.

இதையடுத்து மதுவில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொல்ல தீர்மானித்தார். அதற்காக கெடிலம் ஆற்றங்கரைக்கு அழைத்து சென்று மதுவில் வி‌ஷம் கலந்து கொடுத்து நர்சு திவ்யாவை கொலை செய்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சித்ராவை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் திவ்யா பயன்படுத்திய பை மற்றும் செல்போன் எங்கே? என்று கேட்டனர்.

அப்போது கீழ்காங்கயம் குப்பத்தில் உள்ள தங்கராசு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் புதைத்து வைத்திருப்பதாக கூறினார். உடனே போலீசார் அவரை அங்கு அழைத்து சென்றனர்.

தனது தோழி திவ்யாவை தள்ளி கொல்ல நினைத்த கிணற்றில் தானும் குதித்து தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி போலீசாரை அந்த கிணற்று பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது சித்ரா போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடினார். அவரை பிடிக்க போலீசார் துரத்தினர். யாரும் எதிர்பாராத வகையில் அங்குள்ள பாழுங்கிணற்றில் திடீரென்று சித்ரா குதித்தார்.

அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் பலத்த காயம் அடைந்த சித்ரா அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அந்த கிணறு 150 அடி ஆழம் கொண்டதாகும். கிணற்றை யாரும் பயன்படுத்தவில்லை. மேலும் அந்த கிணற்றில் வெப்பம் அதிகம் இருந்தது. இதைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் உடலை மீட்க போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் முடிவு செய்தனர்.

Tags:    

Similar News