செய்திகள்

ஓ.என்.ஜி.சி. நிறுவன ஆராய்ச்சியை நிறுத்தக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2017-06-25 12:15 GMT   |   Update On 2017-06-25 12:15 GMT
சேத்தியாத்தோப்பு அருகே ஓ.என்.ஜி.சி. நிறுவன ஆராய்ச்சியை நிறுத்தக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேத்தியாத்தோப்பு:

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வெய்யலூர் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்தது. பின்னர், அங்கு ஆழ்துளைகிணறு அமைத்து, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வுகழகம் என்ற பெயரில் அந்த நிறுவனம் ஆராய்ச்சி பணியை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக ஒப்பந்ததேதி முடிவடைந்த பிறகும், அந்த இடத்தில் ஆய்வு கழகம் தங்களது ஆராய்ச்சி பணியை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதற்கிடையே கடந்த சில மாதமாக ஆய்வு கழகத்தில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

இதையடுத்து, வெய்யலூர், மடப்பாக்கம், வாழக்கொல்லை, ஓடாக்கநல்லூர், பரிபூரணநத்தம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் துர்நாற்றம் வீசுவதாகவும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், வெய்யலூரில் இயங்கி வந்த இயற்கை எரிவாயு ஆய்வு கழகத்தின் ஆராய்ச்சி பணியை நிறுத்த வேண்டும் என்று கோரிக் கை விடுத்தனர். இந்த நிலையில், 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெய்ய லூரில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வு கழகம் முன்பு ஒன்று திரண்டு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆய்வு கழகத்தின் ஆராய்ச்சி பணியை நிறுத்தி, அங்குள்ளவர்கள் வெளியேறவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கைக்குழு தேவதாஸ் படையாண்டவர் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News