சினிமா செய்திகள்

ஏழுமலை பார்ட்-2 ரெடி... ஆக்ஷன் கிங் அர்ஜூன் கொடுத்த சூப்பர் அப்டேட்

Published On 2026-02-11 12:31 IST   |   Update On 2026-02-11 12:31:00 IST
  • சீதா பயணம் திரைப்படம் வருகிற 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
  • அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். அதிரடி சண்டைக் காட்சி கொண்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற அர்ஜூன் இடையில் சில திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதனிடையே அர்ஜூன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சீதா பயணம் திரைப்படம் வருகிற 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில், அர்ஜூன் அளித்த சமீபத்திய பேட்டியில் ஏழுமலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அப்டேட் கொடுத்துள்ளார். மேலும், இது தொடர்பாக முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அர்ஜூன், "நான் முன்னதாக 3-4 படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன், ஆனால் இப்போது அந்த வேடங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டேன். ஏனென்றால் ரசிகர்களுக்கு அது பிடிக்கவில்லை. பலர் என்னை எப்போதும் பார்த்தது போல, வலுவான, நேர்மறையான வேடங்களில் பார்க்க விரும்புவதாக என்னிடம் சொன்னார்கள்.

அதனால் இனிமேல், நான் ஹீரோ வேடங்களில் மட்டுமே நடிக்கிறேன். ஏழுமலை பார்ட் 2 கதை தயாராக உள்ளது. அதை எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம். இந்தப் படத்தின் கதை ரொம்ப சூப்பராக வந்துருக்கிறது. முழுமையாக சாப்பிட்டுவிட்டு என் வயிற்றைக் காட்டி சாதாரணமாக திரையில் தோன்றுவது எனக்குப் பிடிக்காது. மக்கள் என்னைப் பார்க்க தியேட்டருக்கு வருவதால் நான் கடினமாக உழைக்க விரும்புகிறேன்," என்றார்.

Tags:    

Similar News